
‘நிறைமாத நிலவே’ எனும் வெப்சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுதா.இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
ட்யூப்லைட் எனும் youtube சேனலில் இவர் நடித்துள்ள ‘நிறைமாத நிலவே’ வெப் சீரியஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்த இவருக்கு பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது.
சமீபத்தில் இவர் தனது காதலரை ரசிகர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் வேறு யாருமில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த நடிகரான விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார் நடிகை சம்யுதா.
சீரியலில் ஒன்றாக நடிக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஷ்ணுகாந்தும் நடிகை சம்யுதாவும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
நடிகர் விஷ்ணுகாந்த் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரஜினி , கோகுலத்தில் சீதை என பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்துள்ளனர். இந்த சீரியல் முடிந்த கையோடு தனது காதலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் நடிகை சம்யுதா.
இந்த பதிவினை பார்த்த ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்பொழுது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களின் அழகான திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.