‘அந்த ஒரு விஷயத்துக்காக வெயிட்டிங்… அது நடந்ததும் திருமணம்தான்’… பசங்க பட நடிகரின் ஓபன் டாக்… வைரலாகும் தகவல் இதோ…

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் 2009ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘பசங்க’.  இத்திரைப்படத்தில் அன்பு  கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் கிஷோர். அந்த வருடத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.  இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் கிஷோருக்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசின் விருதும், தேசிய விருதும் வழங்கப்பட்டது.

   

தற்பொழுது நடிகர் கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி காதலிப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி. இதைத்தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் செய்வதில்லை என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் கிஷோர். இவர் சமீபத்தில் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். சீரியல் நடிகை ப்ரீத்தி நடிகர் கிஷோரை விட 4 வயது மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவர் அளித்துள்ள பேட்டியில், ‘என்னை விட அவர் 4 வயது மூத்தவர் என்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் வீட்டாருக்கும் அது பிரச்சனை இல்லை. ஒரே ஒரு முக்கியமான விஷயத்திற்காக வெயிட் பண்ணுகிறோம். அது நடந்து முடிந்ததும் எங்கள் திருமணம் குறித்து அறிவிப்பை நிச்சயமாக வெளியிடுவோம்’ என்று ஓபனாக பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.