ஹோட்டலில் பக்கத்து ரூம் கதவைத் தட்டிய நடிகர் சதீஷ்… என்ன நடந்துச்சுன்னு தெரியுமா உங்களுக்கு…. வைரலாகும் வீடியோ இதோ…

நடிகர் சதீஷ் தான் தங்கியிருந்த ஹோட்டலில் அடுத்த ரூமின் கதவை தட்டி விட்டு ஒளிந்து கொள்வது போல காமெடி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்திலும், குணசித்திர வேடத்திலும் நடித்து கலக்கி வருபவர் நடிகர் சதீஷ். அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் தன்னுடைய காமெடி பேச்சை எடுத்து விட்டு, மேலும் பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

   

இவர் தமிழில் ‘கொலை கொலையா முந்திரிக்கா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் மெரினா, தமிழ் படம், மதராசபட்டினம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் போன்ற எண்ணற்ற படங்களில் காமெடி வேடங்களில் நடித்து கலக்கி உள்ளார்.

சதீஷ் சிந்து என்பவரை 2019 ல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நடிகர் சதீஷ் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் ‘நாய் சேகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு என்று பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் காத்துக் கிடக்கின்றனர்.

தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தான் தங்கியிருந்த ஹோட்டலில் அடுத்த ரூமின் கதவை தட்டி விட்டு ஒளிந்து கொள்வது போல வெளியாகிவுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் ‘வீடியோ எடுக்குறவரை மறந்துட்டீங்களே ப்ரோ’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)