ஜென்டில்மேன் திரைப்படத்தில்.. முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் சங்கர். இவரது படங்களில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது. இவர் எஸ் கே சந்திரசேகர் இடம் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா ,சுபஸ்ரீ ,நம்பியார், மனோரமா, செந்தில், கவுண்டமணி, வினித் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

   

இப்படம் வெளியாகிதிரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியை கண்டது  மற்றும் பல விருதுகளையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் கதையை  நடிகர் சங்கர் கமலஹாசனிடன்  கூறினாராம். அதைக் கதை  கேட்ட கமல்  இந்த கதையை இவரை சொல்லி இருக்கிறாரோ?.. இவ்ளோ பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை இவர் எடுத்து விடுவாரா? யாரோ  கே.டி குஞ்சுமன் தயாரிப்பாளராம் இது சரியாக வருமா? என்று நினைத்து கமலஹாசன்,

நான் இப்போ மைக்கேல் மதனன் காமராஜன் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன், இது எனக்கு சரியாக  வராது என்று கூறி  ஷங்கரை அனுப்பிவிட்டாராம்.இந்நிலையில்  ஒருமுறை அண்ணாமலை சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்த கமலஹாசன் தவுசண்ட் லைட்ஸ் அருகில் 50 அடி உயரத்தில் கட்டவுட் ஒன்றை பார்த்துள்ளார்.

80களில் அந்த இடத்தில ஒரு ஹீரோவுடைய கட்டவுட் இருந்தால் அவர் பெரியாளாக பார்க்கப்படுவாராம். அது அர்ஜுனுடைய ‘ஜென்டில்மேன்’ படத்திற்கான கட்அவுட்டாம். இதை பார்த்த நடிகர் கமல்ஹாசன்  இப்படத்தை பார்க்க வேண்டும் என்று  படத்தை பார்த்துள்ளார். அதன்  பிறகு இப்படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று வருத்தப்பட்டாராம்.  இதை பற்றி  நடிகர் கமலஹாசன்  ஒரு பேட்டியில்  கூறியுள்ளார்.