அன்றும், இன்றும். என்றும்…. மனதை மயக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர் பின்னணி பாடகர் மனோ…. கடந்து வந்த திரை பயணத்தின் சில புகைப்படங்கள் இதோ…!!!

மொத்தம் 16 மொழிகளில் 2200 பாடல்களை பாடி இருக்கும் பிரபல பின்னணி பாடகர் மனோவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இசைஞானி இளையராஜா.

   

பூவிழி வாசலிலே திரை படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே அண்ணே என்ன சொன்னே… என்பதுதான் இவர் முதல் முதலாக பாடிய பாடல். இந்த ஒரு பாட்டில் இவர் ஓகோ என்று பிரபலமாகிவிட்டார்.

இதனை தொடர்ந்து கமல், ரஜினி என பல நடிகர்களுக்கு வரிசையாக பாடும் அளவிற்கு முன்னணிக்கு வந்தார். ரஜினி மட்டுமல்லாமல் அனைத்து முன்னணி நடிகர்களுக்குமே பாடல்களை பாடியுள்ளார்.

மற்ற இசையமைப்பாளர்களை விட இசைஞானி இளையராஜா இசையில் தான் அதிகமாக பாடல்களை பாடியுள்ளார்.

பாடகர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக கமலஹாசனோடு சிங்காரவேலன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கவுண்டமணியோடு இவர் அடித்த காமெடி மறக்க முடியாது.

இது தவிர 250 நாடகங்களிளும், 3000 மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார்.

இவரது படம் ஒன்றுக்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசை குழுவில் பணிபுரிவதற்காக சென்னைக்கு அழைத்துச் சென்றார்.

அவரோடு இரண்டரை வருடங்கள் பணி புரிந்தார். 1985 ஆம் வருடம் கற்பூர தீபம் படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி பாலசுப்ரமணியம், பி சுசிலாவோடு இணைந்து பாடும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அன்றிலிருந்து இவருடைய பாடல் பயணம் ஆரம்பித்தது.

சின்னத்தம்பி, காதலன், சொல்ல துடிக்குதடி, உள்ளத்தை அள்ளித்தா, வேலைக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் ஏ. ஆர் ரகுமான், இளையராஜா, எம் எஸ் விஸ்வநாதன், சந்திரபோஸ், தேவா போன்ற இசையமைப்பாளர்களின் இசையை அமைப்பில் தொடர்ந்து பாடி வந்தார்.

இவர் சின்னக்குயில் சித்தரவோடு பல மேடைகளில் மனதை உருக்கும் பாடல்களை பாடியுள்ளார்.

எனக்கு 20 உனக்கு 18 உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களில் மட்டுமே தமிழில் நடித்த இவர் எஸ் பி பாலசுப்பிரமணியனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இவர்கள் இருவரும் பல மேடைகளில் ஒன்றாக பாடல்களை பாடியுள்ளார்.