அடடே..இவர்களுமா?… சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்யும் இயக்குனர் விக்னேஷ் சிவன்… இணைந்து சென்ற பொன்னியின் செல்வன் பட நடிகர்கள்… வைரல் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் பொன்னியின் செல்வன் பட நடிகர்களான ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி என பலரும் சபரிமலையில் சென்று ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டதும், தற்பொழுது வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானதும் நாம்  அனைவரும் அறிந்து ஒன்றே. நடிகர் அஜித்தின் நடிகர் அஜித்தின் நடிப்பில் தற்பொழுது துணிவு திரைப்படம் ரிலீசாகியுள்ளது.

   

இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் திரைப்படம் இயக்க உள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு தான் வந்தது. இந்நிலையில் அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன்னால் சபரிமலைக்கு சென்றுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவருடன் பொன்னியின் செல்வன் பட நடிகர்களான நடிகர் ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி என பலரும் சென்றுள்ளனர். சமீபத்தில் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு செல்லும் வாழையில் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் நடிகர் ஜெயராம், விக்னேஷ் சிவன், ஜெயம் ரவி மற்றும் சிலருடன் சபரிமலையில் ஐயப்பனை சுவாமி தரிசனம் செய்யும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

ஏற்கனவே துணிவு படத்தை ரிலீஸ் செய்த இயக்குனர் ஹச் வினோத் சபரிமலைக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதை தொடர்ந்து தற்போது நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் சபரிமலைக்கு படையெடுத்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.