செம மாஸ்… கையில் துப்பாக்கியை வைத்து ‘விக்ரம்’ பட பாணியில் போஸ் கொடுத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ… 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் First லுக் போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி  போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. இவர் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இதை தொடர்ந்து தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தான் ‘மகாநதி’. இதில் பழம்பெறும் நடிகை சாவித்ரியாக நடித்து தேசிய விருது வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து ‘சாணி காகிதம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து மக்களை கவர்ந்துள்ளார்.

தற்பொழுது இவர் சைரன், ரகு தாத்தா ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் தற்போது புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார். அப்படத்தின் First லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ‘ரிவால்வர் ரீட்டா’ என தலைப்பிட்டுள்ள இப்படத்தின் First லுக் போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார்.

கதையின் நாயகியாக கீர்த்தி நடிக்கும் இப்படத்தை கே. சந்துரு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் First லுக் போஸ்டரில் தனது கையில் இரு துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி. இதை பார்த்த ரசிகர்கள் ‘விக்ரம் பட கமலஹாசனை போல செம மாஸாக இருக்கிறாரே’ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வைரலாகும் அந்த First லுக் போஸ்டர் இதோ…