நடிகர் ஆர்யாவின் தம்பி மனைவியை பார்த்திருக்கீங்களா?… எவ்ளோ அழகா இருக்காங்க?… நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இவர்  நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் கேப்டன். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்பொழுது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

இப்படத்திற்கு ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’ என்று பெயரிட்டுள்ளனர். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் ஆர்யாவிற்கு சத்யா என்ற தம்பி ஒருவர் உள்ளார். இவர் தமிழில் ‘புத்தகம்’ என்ற  திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானா.ர் இதை தொடர்ந்து அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் காதல் 2 கல்யாணம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகர் ஆர்யாவின் தம்பி நடிகர் சத்யாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பாவனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நடிகர் சத்யாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த அழகிய திருமண புகைப்படம்…