‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு டூப் போட்ட நபர் இவர்தானா?… முதன்முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்… வைரலாக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீசான திரைப்படம்’ வாரிசு’. இத்திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட நிலையில், தற்போது இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

   

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான திரைப்படம் வாரிசு . இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். தற்பொழுது 300 கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்து வருவதாக இணையத்தில் கூறப்படுகிறது. துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படத்தின் மொத்த வசூல் தான் அதிகம்..

இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அஜித்தின் சில காட்சிகளுக்கு டூப் பயன்படுத்தி இருப்பதாக இணையத்தில் ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கும் ஒருவர் சண்டை காட்சிகளில் டூப்பாக நடித்துள்ளாராம். தற்பொழுது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது தளபதி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அவரின் புகைப்படம்….