12 வருடங்களாக தவமிருந்து பெற்ற…  ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஞானத்தின் கியூட்டான மகளை  பாத்திருக்கீங்களா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் குறைவான காலத்திலேயே அதிக வரவேற்பு பெற்று விடும். அந்த மாதிரி தற்போதைய சீரியல்களான வானத்தைப்போல, சுந்தரி, எதிர்நீச்சல் இருந்து வருகிறது. அதிலும் இந்த  சீரியல் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீரியலாகும்.

   

பெண்கள் அடிமைப்படுத்துவதை தகர்த்தெறியும் சீரியல் என பலர் புகழ்ந்து வருகின்றனர். இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டு வருகிறது.

மேலும் இந்த சீரியல் அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்டது. இத்தொடரில் பெண் புரட்சி வசனங்கள் அதிகம் இடம் பெறுவதால் இல்லதரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சீரியலில் அண்ணன் சொல் பேச்சைக் கேட்டு நடக்கும் தம்பிகள் மத்தியில், வீட்டிற்கு மருமகள்களாக வரும் பெண்கள் வீட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்பதை மையமாகக் கொண்டு கதை நகர்த்தப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் தற்போது ஞானம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் கமலேஷ். இவர் தனது அண்ணன் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அதற்கு எதிர்ப்பு கூறாமல் இருக்கும்படி இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.

நடிகர் கமலேஷ் 2007 இல் சிந்துஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வருடங்களுக்கு மேல் குழந்தை இல்லை. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தற்பொழுது நடிகர் கமலேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.