இந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருகில் நிற்கும் இவர் யார் தெரியுமா?… இவர் ஒரு பிரபல நடிகரின் தம்பியா..

சமூக வலைதளைங்களில் அவ்வப்பொழுது திரைபிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது . மேலும் புகைப்படங்களை பகிர்ந்து இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் தனது சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

   

தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், சமூக ஆர்வலர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகராக மட்டுமின்றி இவர் இயக்கிய திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவரது உதவும் குணம் பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பல மாற்றத்திறனாளிகளுக்கு பல வகைகளில் உதவி வருகிறார். இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதுவும் முக்கியமாக முனி காஞ்சனா போன்ற பேய் படங்களின் மூலம் தான் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பியான எல்வின் ரஜினிகாந்தின் போஸ்டர் பக்கத்தில் நின்று தனது சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படமும், குசேலன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இவர் தற்பொழுது கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.