சினிமா பிரபலங்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வைபவ்… இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படங்கள்..!!!

தமிழ் சினிமாவில் சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். தெலுங்கு திரைப்படம் இயக்குனரான கோதண்டராமர் ரெட்டியின் மகன் ஆவார்.

   

இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான கோதவா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் ரஜினி, அஜித், சுந்தர் சி என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தமிழ் சினிமாவில் இவரை அறிமுகம் செய்த வைத்தது இயக்குனர் வெங்கட் பிரபு தான்.

 

இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான சரோஜா படத்தில் தான் முதன்முதலில் நடித்திருந்தார். அதன் பிறகு மங்காத்தா, சென்னை 28 போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இதை தொடர்ந்து காட்டேரி ஆர் கே நகர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சாத்வி ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவரின் மனைவி அவ்வபோது குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

நடிகர் வைபவ் தற்போது சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கின்றார்.

நேற்று வைபவ் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்த நிலையில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சென்னை சிட்டி கேன்சர் திரைப்படத்திலிருந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். நடிகர் வைபவ் பிறந்தநாள் புகைப்படங்கள் இதோ..