ஸ்டார்ட்-ஆன கல்யாண வைபவம்… கோலாகலமாக ஹல்தி கொண்டாடிய டாடா பட நடிகை… வைரல் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் டாடா என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அவர் அபர்ணாதாஸ். இவர் ஒரு மலையாள நடிகை.

   

 

தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும் டாடா திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

 

இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது தனக்கு அதெல்லாம் தேவையில்லை என்று கூறிவிட்டு திருமணத்தில் இறங்கிவிட்டார்.

 

 

இந்த வருடம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சக்க போடு போட்ட திரைப்படம் தான் மஞ்சுமேல் பாய்ஸ். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் தீபக் பரம்பொல்.

 

இவர்கள் இருவரும் மலையாளத்தில் ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அப்படத்தில் இருந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் திருமண பத்திரிகையை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்கள்.

 

அந்த வகையில் அபர்ணாதாசுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஹல்தி கொண்டாடி இருக்கிறார்.

தாவணி பாவாடையை கட்டிக்கொண்டு அபர்ணாதாஸ் செம அழகாக இருக்கிறார். அவர் மீது பால் மஞ்சள் ஆகியவற்றை ஊற்றி அவரது நண்பர்கள் விளையாடுகிறார்கள்.

 

இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.