அந்த இடத்தில டாட்டூ குத்திய பிக் பாஸ் பிரபலம்… டாட்டூ குத்துற இடமா அது?…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…

மாடலிங் துறையில் முதன்முறையாக கால்பதித்து கலக்கியவர் நடிகை அபிராமி வெங்கடாசலம்.  இவர் நடிகர் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

   

இவர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பிரபலத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அபிராமி. சமீப காலமாக பெரிய அளவில் அபிராமிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகிறார்.

மகாசிவராத்திரி விழாவை கொண்டாட நடிகை அபிராமி காளஹஸ்திக்கு சென்று அங்கு நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அபிராமி.

இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் தனது ஆன்மீக ஈடுபாட்டை காட்ட அவரது முதுகில் நடராஜர் உருவத்தை டாட்டூவாக குத்தி இருக்கிறார்.

மேலும் அவர் பாம்பு டாட்டூவை எந்த இடத்தில் குத்தி இருக்கிறார் என்பதை பார்த்தால் நீங்க ஷாக் ஆயிடுவீங்க. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘டாட்டூ குத்துற இடமா அது?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்….