அப்படி போடு போடு…. “அக்கா திருமணத்தில் பாலிவுட் நடிகருடன் ஆட்டம் போட்ட அதிதி சங்கர்”… வைரல் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருடன் வளம் வருபவர் இயக்குனர் சங்கர். தன்னுடைய திரைப்படத்தில் மட்டுமல்லாமல் மகளின் திருமணத்திலும் பிரம்மாண்டத்தை நிகழ்த்தி காட்டி இருக்கின்றார்.

   

பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள அனைத்து சினிமா பிரபலங்களும் சங்கரின் மூத்த மகள் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.

இயக்குனர் சங்கர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா சங்கர், அதிதி சங்கர், அர்ஜித் சங்கர் என்று இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்.

இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு விருமன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி இருக்கின்றார்.

இவரது மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த ரோகித் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது.

பின்னர் ஆறு மாதத்தில் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது உதவி இயக்குனரான தரும் கார்த்திகேயன் என்பவருடன் கடந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமண விழாவிற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதை தொடர்ந்து நேற்று வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பாலிவுட் மற்றும் கோலிவுட் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த விழாவிற்கு வந்திருந்த பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் அதிதி ஷங்கருடன் இணைந்து கில்லி படத்தில் இருந்து வெளியான அப்படி போடு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கின்றார்.

அதைத்தொடர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கும் நடனமாடி இருந்தார்கள். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.