கணவருடன் இணைந்து படம் பார்க்க வந்த நடிகை நயன்தாரா… வாரிசா?… துணிவா?… நீங்க இவரோட ரசிகையா?…

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தியேட்டருக்கு படம் பார்க்க வந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் திரைப்படம் இரண்டும் இந்த பொங்கலுக்கு ரசிகர்களுக்கு பொங்கல் ஸ்பெஷலாக திரையிடப்பட்டுள்ளது. இத்திரைப்படங்கள் இரண்டும் தொடர்ந்து வசூலிலும் விமர்சனத்திலும் ஒரே மாதிரியான நிலையை கடைப்பிடித்து வருகிறது.

   

மேலும் தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டு தான் உள்ளது. இத்திரைப்படம் கடந்த 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்ட நாள் முதலே தற்பொழுது வரை டிக்கெட் புக்கிங் உச்ச கட்டத்திலேயே இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து திரை பிரபலங்களும் நேரடியாக தியேட்டர்களுக்கு சென்று இரண்டு நடிகர்களின் படங்களையும் பார்த்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் தியேட்டர்களிலிருந்து புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்துள்ளனர். அவர்கள் எந்த திரைப்படத்தை பார்த்தனர் உங்களுக்கு தெரியுமா? நடிகர் அஜித்தின் துணிவு படம் தான்.

தற்பொழுது அவர்கள் வெளியிட்ட இந்த புகைப்படம் படு வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் துணிவு திரைப்படத்தை பற்றி பதிவிட்டும் உள்ளார். இப்பதிவில் இயக்குனர் ஹச் வினோத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பதிவு படுவைரலாகி வருகிறது.