பழம்பெரும் மறைந்த நடிகை சாவித்திரியின் மகன் மற்றும் மகள் இவர்கள்தானா?… அச்சு அசல் அம்மாவை போலவே இருக்காங்களே… லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

பழம்பெரும் மறைந்த நடிகை சாவித்ரியின் மகன் மற்றும் மகளின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சாவித்திரி. இவர் எம்ஜிஆர், சிவாஜி,, ஜெமினி கணேசன் போன்ற பல மாபெரும் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சாவித்ரி .ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் இவரை தமிழ் சினிமா தன் வீட்டுப் பிள்ளையாகவே நினைத்தது.

   

தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை சாவித்திரி 1952 இல் வெளிவந்த ‘கல்யாணம் பண்ணிப்பார்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.. இதைத்தொடர்ந்தவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாவித்திரி நடிகர் ஜெமினி கணேசனை 1952ல் இரண்டாம் மனைவியாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு சதீஷ்குமார் கணேசன் என்று ஒரு மகனும் விஜய சாமுண்டீஸ்வரி என்ற ஒரு மகளும் பிறந்தனர். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படம் கீர்த்தி சுரேஷ் நடிக்க ‘மகாநதி’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசலா அம்மாவை போலவே இருக்கிறார்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்..

இதோ அந்த புகைப்படம்…