
2019ல் கன்னடத்தில் வெளியான ‘ஒந்து கதை ஹெல’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதைத் தொடர்ந்து அதே ஆண்டில் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘கேங் லீடர்’ என்ற படத்தில் நடித்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
அதன்பிறகு தெலுங்கில் முன்னணி நடிகர் முன்னணி நடிகர் ஷர்வானந்த்க்கு ஜோடியாக ‘ஸ்ரீகாரம்’ எனும் படத்தில் நடித்தார் பிரியங்கா மோகன்.
தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
டான் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டிக் டாக் எல்லாம் இங்க’ என்ற பாடல் ஆனது பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. இசையமைப்பாளர் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் நடிகை பிரியங்கா மோகனுக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை பிரியங்கா மோகன்.
இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.
தற்பொழுது இவர் வெள்ளை நிற உடையில் எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுப்பாங்க போலயே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.