குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய ஆர்யா – சாயிஷா தம்பதி…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தேடி தந்தது.

   

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்யா படங்களில் பிசியாக நடித்து வர மறுபக்கம் சாயிஷா குழந்தையை கவனித்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்திக்கொண்டு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதி நேற்று தங்களின் நான்காம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

தங்களது மொத்த குடும்பத்துடன் வெளியே சென்று உணவு சாப்பிட்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.