இந்த ‘சிறுவர் மலர்’ அட்டை புகைப்படத்தில் தனது தங்கையுடன் இடம்பெற்ற முன்னணி பிரபலம் யார் தெரியுமா?… அடடே இவரா?… இதோ பாருங்க…

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு  வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே மொட்டை மாடியில் தனது இடுப்பை காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஒரே இரவில் பிரபலமானார் .

   

அந்தப் புகைப்படங்கள் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். தமிழில் தற்போது இடும்பன்காரி என்கிற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன், கடைசியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததால் இவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து கலக்கி வருகிறார். .

இவர் தற்பொழுது தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களால் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் 18. 06 .1993 வெளியான சிறுவர் மலர்  புத்தகத்தில் தனது தங்கை சுந்தரி திவ்யா உடன் இடம் பெற்றுள்ளார். பலரும் பார்த்திடாத இந்த அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….