‘எனக்கு உண்மையான தீபாவளி அந்த நடிகர் இறந்தால் தான்’… ஆவேசத்தில் பொங்கிய பிரபல நடிகை… என்ன நடந்தது தெரியுமா?…

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து வந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

   

அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.

இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

சமீபத்தில் இவர் பார்த்திபன் நடிப்பில் வெளியான “இரவின் நிழல்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரேகா நாயர் பற்றி அவதூறாக பேசியது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் நடு ரோட்டில் சண்டை போட்டு கொண்டனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேகா நாயர், ‘எனக்கு உண்மையான தீபாவளி எப்போது என்றால் பயில்வான் ரங்கநாதன் எப்போது சாகுறானோ அன்று தான். என்னை குறித்து மோசமாக பேசுவதால் பயில்வான் ரங்கநாதனுக்கு என்ன கிடைக்கப்போகிறது?’ என்று மிகவும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.