தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு பல சேனல்கள் உள்ளது.
அதாவது சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்களில் சின்னத்திரை சீரியல்கள் மட்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி ஒன்றாக பணி புரிவதால் அங்கே காதலும் நட்பும் ஏற்படுவது சகஜம் தான்.
ஆனால் அந்த நட்பு காதல் நீண்ட நாள் தொடர்வது தான் அருகிலும் அரிதாக பார்க்கப்பட்டு வருகின்றது.
சன் டிவியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் பல கதாபாத்திரங்கள் இருக்கின்றது. சீரியலில் பார்க்கும் கேரக்டர்கள் அப்படியே ரசிகர்களின் மனதில் நிறுத்தி விடுவதைப் போல கதாபாத்திரங்கள் அமைந்துள்ளது.
இந்த சீரியல் ஆணின் அடக்கு முறையால் திருமணத்திற்கு பிறகு வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் பெண்கள் தங்களுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்து முன்னேறுவதை குறிக்கும் விதமாக இருந்து வருகின்றது.
இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் மதுமிதா என்பவர் நடித்து வருகிறார்.
இவரின் தோழியாக வைஷ்ணவி, வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை வைஷ்ணவியும் மதுமிதாவும் உயிர்த்தோழிகள் ஆவார்கள். சீரியலில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் வைஷ்ணவி தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்திலும் வைஷ்ணவி மற்றும் மதுமிதா பிறந்தநாள் பாட்டியை அவ்வளவு அழகாக கொண்டாடுகிறார்கள்.
தனது வருங்கால கணவருடன் வைஷ்ணவி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.