‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து வெளியேறும் நடிகை ரேஷ்மா… இனி அவருக்கு பதில் இவரா?… வைரலாகும் தகவல் இதோ…

‘பாக்கியலட்சுமி’ சீரியல் இருந்து ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா விலக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில்  ஒன்று ‘பாக்கியலட்சுமி ‘.இந்த சீரியலில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தனது குடும்பத்தை எவ்வாறு கவனித்துக் கொள்கிறாள் என்பதை மிகவும் அழகாக எடுத்துரைத்துள்ளார் இயக்குனர் .இதை தொடர்ந்து பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை தொடர் அழகாக காட்டுகிறது.

   

தற்பொழுது இந்த சீரியல் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் எழில் அமிர்தா அல்லது வர்ஷினி யாரை  திருமணம் செய்ய போகிறார் என்பது ரசிகர்களிடையே கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல எழில் வீட்டை மீட்பாரா? என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் எழிலின் திருமண காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்நிலையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலை விட்டு ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா விலக இருப்பதாக இணையத்தில் பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இனி அவருக்கு பதில் பிக் பாஸ் பிரபலமான வனிதா நடிக்க இருப்பதாகவும், சின்னத்திரை சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இத்தகவல் உண்மைதானா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.