கேன்சரால் பாதிக்கப்பட்ட ‘அங்காடித்தெரு’ நடிகை… ‘வலி தாங்க முடியல… என்ன விஷஊசி போட்டு கொன்னுடுங்க’… ரசிகர்களை கண் கலங்க வைத்த பேட்டி இதோ…

2010ல்  இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘அங்காடித் தெரு’. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். ‘அங்காடி தெரு’ படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு என பயங்கர பிஸியாகி முன்னணி நாயகியாகவும் மாறிவிட்டார்.

   

இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகை சிந்து. இதை தொடர்ந்து இவர் சினிமாவிலும், சீரியலிலும் பிஸியாக நடித்து வந்தார். கொரோனா காலக் கட்டத்தில் கூட பல்வேறு உதவிகளை செய்தவர் சிந்து. தற்பொழுது இவர் கேன்சரால் அவதிப்பட்டு வருவதாக யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது அதிர்ச்சியில் உள்ளனர்.

அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘2020இல் எனக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எனது மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினேன். நாட்டு மருந்து, இங்கிலீஷ் மருத்துவம் என எத்தனையோ வைத்தியம் பார்த்தோம். என்னால் கேன்சரில் இருந்து மீள முடியவில்லை. தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தங்கி நாட்டு வைத்தியம் பார்த்தேன்.

என்னால் அங்கு எந்த சிகிச்சையை என்னால் தொடர முடியவில்லை. என்னை மூன்று ஆண்டுகள் ஓய்வு எடுக்க சொன்னார்கள். நான் உழைத்தால் தான் என் குடும்பம் சாப்பிட முடியும் என்று இருக்கும் பொழுது என்னால் எப்படி ஓய்வு எடுக்க முடியும். எனது நோயின் பாதிப்பை அறிந்த எனது நண்பர்கள் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார்கள்.

அவர்களுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று எண்ணி  சீரியல்களில் நடிக்க தொடங்கினேன். எனது கையில் வளையல் போட்டதனால் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக எனது இடது கையும்  செயல்படவில்லை’ என்று உருக்கமாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மேலும் அவர் குறிப்பிடும் பொழுது, ‘தினம் வலியால் துடிப்பதற்கு பதிலாக எனக்கு விச ஊசி போட்டு கொன்று விடுங்கள் என்று டாக்டர்களிடம் கேட்டுப் பார்த்தேன்.

தற்பொழுது இந்த பேட்டி முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு சென்று, எனது சிகிச்சைக்கும். எனது மகளுக்கு அரசு வேலையும் கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்றும் கூறியுள்ளார். இப்படி சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுவதாக நடிகை சிந்து அளித்துள்ள இந்த பேட்டியை கண்ட ரசிகர்கள் மனம் வருந்தி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…