25 வருடம் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக களமிறங்கும் பிரபல நடிகரின் மனைவி… யார் தெரியுமா?… வைரலாகும் தகவல் இதோ…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் தங்கையாக 80ஸ் பிரபல நடிகை ஜீவிதா களமிறங்க உள்ளார் என்று தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

   

1980களில் வெளிவந்த பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர்தான் நடிகை ஜீவிதா. இவர் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த நானே ‘ராஜா நானே மந்திரி’ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர். விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘சேது’ படத்தை தெலுங்கில் ரீமிக்ஸ் சேர்ந்து இயக்கியவர் இவர்தான். இவர் கடைசியாக தமிழில் ‘வளைகாப்பு’ என்கிற படத்தில் 1988 இல் நடித்தார். இதை தொடர்ந்து தெலுங்கில் மட்டும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என்று இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்பொழுது தெலுங்கு திரைப்படங்களில் நடிகைகளாக நடித்து வருகின்றனர்.

25 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜீவிதா தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இவரது கதாபாத்திரம் இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ள முதல் கட்ட படப்பிடிப்பிலேயே ரஜினிகாந்த் மற்றும் ஜீவிதா இருவரும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.