மாப்பிள்ளை பெரிய இடம்தான் போலயே.. நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் இவரா..? இணையத்தில் கசிந்த தகவல்..!!

முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன், தனுசுடன் நடித்த தொடரி ஆகிய படங்கள் கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல வரவேற்பை தேடித்தந்தது.

   

அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதே போல சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரெமோ, விஜயுடன் பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுத்து நடிப்பார். படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி கடந்த 13 ஆண்டுகளாக அவர் கேரளாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் மகனை காதலித்து வருவதாக செய்திகள் உலா வருகிறது. மேலும் கீர்த்தி சுரேஷுக்கு 31 வயது ஆவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகிறதாம். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.