‘குக் வித் கோமாளி’யின் நடுவர் வெங்கடேஷ் பட்டின் யாரும் பார்த்திடாத… அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று  தனி  ரசிகர் பட்டாளமே உள்ளனர்.  அதில் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோகளில்  ஒன்றான ‘குக் வித் கோமாளி’ ஷோவானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

   

வெங்கடேஷ் பட் கன்னடத்தில்  வெளியான சீசனிலும்  நடுவராக கலந்து கொண்டார்.

அந்த வகையில் தொடர்ந்து மூன்று சீசன்கள் முடித்த நிலையில் நான்காவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.

தற்போது இந்த சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. அதற்குள் எலிமினேஷனும் நடந்து விட்டது.

இதில்  போட்டியாளர்கள் ஒரு பக்கம் கோமாளிகள் ஒரு பக்கம் இருந்தாலும்  நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு அவர்களும்  ஒரு பக்கம் ஸ்கோர் செய்து வருகின்றனர்.

பொதுவாக சமையல் என்றாலே பெண்கள் தான் என்று இருந்த விஷயம் தற்போது ஆண்களும் சமைக்கலாம் என்று மாறி உள்ளது.

ஆண்களில் சிலர் சமையல் கலை படிப்பை  படித்து வெளிநாட்டில் வேலை செய்தும் வருகின்றனர்.  அந்த வகையில் சமையலை தொழிலாக கொண்டு வெற்றியடைந்தவர்  செஃப் வெங்கடேஷ் பட்.

இவர் குக் வித் கோமாளி மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளார்.

இவர்  ‘வெங்கடேஷ் பட் இதயத் தோட்ட சமையல்’  யூடியூப் சேனல் சுமார் 3.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இவரின் மற்றோரு  யூடியூப் சேனல் ‘செஃப் வெங்கடேஷ் பட் ‘ இதில்26.6k  ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவர் இன்ஸ்டாகிராமில் 721k  ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

தற்போது அவரது திருமண புகைப்படமானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தை  பார்த்த ரசிகர்கள் ‘நம்ம செஃப் வெங்கடேஷ் பட்டா இவர்?’ என்று  ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.