குடும்பத்தோடு சுற்றுலாவுக்கு சென்றுள்ள இயக்குனர் சங்கர்… எங்கே தெரியுமா?… ரசிகர்களால் வைரலாக்கப்படும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….

இயக்குனர் சங்கர் தனது குடும்பத்தோடு இணைந்து தற்போது சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் தற்பொழுது கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் நடிப்பில் RC15 படங்களை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் தான் அதிதி சங்கர். இவர் சமீபத்தில் தான் தனது மருத்துவ படிப்பை முடித்தார். மேலும் தற்பொழுது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

   

இவர் வாரிசு நடிகையாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தனது திறமையை கொண்டே முன்னுக்கு வர முயற்சி செய்து வருகிறார். விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2D எண்டெர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவந்த விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் அதிதி சங்கர் பாடிய ‘மதுர வீரன் அழகுல’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது .இதன் மூலம் அவர் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் களமிறங்கியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

தற்பொழுது இவர் படங்கள், விளம்பர படங்கள் என திரை உலகில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி ஷங்கர் குடும்பத்துடன் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகருக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதில் இயக்குநர் ஷங்கர், அவரது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் அர்ஜித் ஆகியோர் உள்ளனர். ஐஸ்வர்யா சங்கர் மற்றும் இந்த சுற்றுலாவில் இடம் பெறவில்லை. இதனால் அவரை மிகவும் மிஸ் செய்வதாக அதிதி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.