நடிகை திரிஷாவின் 3வது பள்ளி ரிப்போர்ட் கார்டு பார்த்திருக்கீங்களா?… எவ்வளவு அழகா இருக்காங்க…. வைரலாகும் கியூட் புகைப்படம் இதோ…

நடிகை திரிஷா மூன்றாவது வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியில் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட் கார்டின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து  பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை திரிஷா. இவர் சிம்ரனுக்கு தோழியாக ‘ஜோடி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர் விக்ரமின் ‘சாமி’, விஜய்யின் ‘கில்லி’ போன்ற படங்களின் மூலம் முன்னணி ஹீரோயினாக பிரபலமானார்.

   

இதை தொடர்ந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தார். தற்பொழுது டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவையாக நடித்து தமிழில் ஒரு சூப்பர் கம் பாக் கொடுத்துள்ளார்.

கடந்த வருடம் பொன்னியின் செல்வன், சில நாட்களுக்கு முன் அதாவது டிசம்பர் 30ம் தேதி ராங்கி என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது. இதில் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய ஹிட், ராங்கி ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்தும் த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் 2, The Road என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் சிறு வயது புகைப்படங்கள் பல இணையத்தில் வெளியாகி முன்னர் வைரலாகி இருந்தது. அந்த வகையில் தற்பொழுது அவரது 3ம் வகுப்பு ரிப்போர்ட் கார்டு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு பழைய புகைப்படமாக இருந்தாலும் இதில் திரிஷா மிகவும் க்யூட்டாக காணப்படுகிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….