‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் சூரி சாப்பிட்ட பரோட்டா எத்தனைன்னு தெரியுமா?… இவ்ளோ தானா?… இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா?…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெட நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் சூரி. இவருடைய காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்பொழுது காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோவாக களமிறங்கி கலக்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரியும் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய ‘விடுதலை’ திரைப்படத்தின் தற்போது ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்.

   

இத்திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சூரியின் திரை வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்த படம் வெண்ணிலா கபடி குழு. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் தான் நடிகர் சூரி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தற்பொழுது இத்திரைப்படத்தில் நடிகர் சூரி எத்தனை பரோட்டா சாப்பிட்டார் என்று தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது இத்திரைப்படத்தில் மிக ஒல்லியாக இருந்த சூரி அதிகமான பரோட்டா சாப்பிடுவது போல இந்த காமெடி காட்சி எடுக்கப்பட்டிருக்கும். இந்த காமெடி காட்சி தான் நடிகர் சூரியின் திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஆனால் நடிகர் சூரிக்கு சுத்தமாக பிடிக்காத உணவு என்றால் அது பரோட்டா தான் என்று அவரே பல பேட்டிகளில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கு பிடிக்காத உணவே  அவருடைய வாழ்க்கையின் ஒரு உயர்ந்த நிலைக்கு அவரை கொண்டு சென்றுள்ளது.

இத்திரைப்படத்தில் அந்த காமெடி காட்சியில் 50 பரோட்டா  சாப்பிடுவது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் சூரி உண்மையாக 13 பரோட்டாக்கள் மட்டும் தான் சாப்பிட்டாராம். சமீபத்தில் கொடுத்த பேட்டியில் இத்தகவல் நடிகர் சூரியே கூறியிருந்தார்.