இந்த புகைப்படத்தில் இருக்கும் க்யூட்டான சிறுமி யார் தெரியுமா?… இவர் பிக் பாஸ் பிரபலம்… அடடே இவரா… கண்டுபிடிங்க பார்க்கலாம்…

பிக் பாஸ் பிரபலமான சீரியல் நடிகை  ஷிவானியின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெள்ளித் திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளார்களோ அதேபோல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி.

   

இதைத்தொடர்ந்து இவர் நடித்த பகல் நிலவு சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். சமீபத்தில் இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஷிவானி. இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து  ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகர் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் சீரியல் நடிகை ஷிவானியின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘பிக் பாஸ் ஷிவானியா இது? சின்ன வயசுல இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அவரின் சிறு வயது புகைப்படம் இதோ…