‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?… அட இவர் இந்த பிரபல சீரியல் நடிகையா?…

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். இவர் இதுவரை பல படங்களை இயக்கி நடித்துள்ளார். இவருடைய இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று ‘முந்தானை முடிச்சு’.

   

1983ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், தீபா, நளினிகாந்த், கோவை சரளா என பலர் இணைந்து நடித்திருந்தனர். அப்போதைய காலகட்டத்தில் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வர வைத்த திரைப்படம் என்ற பெருமை முந்தானை முடிச்சு படத்திற்கு உண்டு.

மேலும் அப்போதே 100 நாள் ஓடிய திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்ற திரைப்படம் இது. இந்த படத்தில் பாக்யராஜின் மகளாக சிறு குழந்தை ஒன்று நடித்திருக்கும். இந்தக் குழந்தை யார் என்பது பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அண்ணி தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தான்.

அவர் பிறந்து 41 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர். இந்த படம் மட்டுமின்றி அவர் வளர வளர மேலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை சுஜிதாவா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.