பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கியின் யாரும் அறிய புகைப்படம் உள்ளே…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருபவர் பாடலாசிரியர் மதன் கார்க்கி .

   

இவர் மார்ச் 10 ஆம் தேதி 1980 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் தந்தை வைரமுத்து ,தாய் பொன் மணி.

இவர் சென்னையில்  கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

அதன் பிறகு அண்ணா பல்கலை பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கிண்டி பொறியல் கல்லூரியில் சி இ ஜி என்ற இளநிலை படிப்பை நிறைவு செய்தார்.

இவர் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முதுநிலை பட்டத்தை முடித்தார்.இந்தியா திரும்பிய கார்க்கி, டிசம்பர் 2007ல் CEG அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினார்.

ஆறு மாதம்  மூத்த ஆராய்ச்சி நிபுணராகப் பணியாற்றினார் . ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான மாணவர் திட்டங்கள் பலவற்றைக் கையாண்டார்.

இவர் முதுநிலைப் படிப்பு மாணவர்களுக்குப் பாடங்களையும் ஆய்வகங்களையும் கையாண்டார்.

ஜூலை 2008முதல் ஜூலை 2009வரை அவர் ஒரு திட்ட அறிவியலாளராகவும் பணியாற்றினார். ஆராய்ச்சிக் குழுக்கள், ME & MBA மாணவர்களுடைய திட்டங்களைக் கையாண்டார்.

அதன்  பிறகு கார்த்திக் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தன்னுடைய பயணத்தை திரைப்படத்துறையில் தொடங்கினார்.

ஷங்கர் இயக்குனர் சங்கருடைய மாபெரும் படைப்பாக ‘எந்திரன்’  படத்தில் வசன  ஆசிரியராக இருந்தார்.

இப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு விஜய் விருதில்  இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற கௌரவத்தை பெற்றர் .

இவர் பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் ஏ ஆர் ரகுமான், ஹரிஷ் ஜெயராஜ், டி இமான் ,எம் எம் கீரவாணி, யுவன் சங்கர் ராஜா,

எஸ் தமன் ,அனிருத், ரவிச்சந்திரன், சாம் cs போன்ற  பல இசையமைப்பாளர்களுடன் இணைத்து  பல மொழிகளிலும் பாடல் எழுதிப் புகழ் பெற்றார்.

இவர் நண்பன், ஏழாம் அறிவு ,கோ ,ஐ எந்திரன், துப்பாக்கி,  கடல்,  ஐ,  2.o போன்ற படங்களுக்கு  பாடல்களை எழுதியுள்ளார்.

‘டிக் டிக்’ படத்தில் ‘குறும்பா’ என்ற பாடல்  மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.இவர் 600க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஐ’ படத்தில் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ என்ற பாடலுக்காக   சிறந்த பாடலாசிரியருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதை  பெற்றார்.

2017 ஆம் ஆண்டு வெளியான ‘மிருதன்’ படத்தில் ‘என் முன்னாள் காதலி’பாடலுக்காக   சிறந்த பாடலாசிரியருக்கான SIIMA பெற்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி  தன்னுடன் படித்த நந்தினி என்பவரை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஹைக்கூ கார்த்திக் என்ற மகன் உள்ளார். தற்போது இவரின் புகைப்படமானது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.