‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடித்த குட்டி விஜயை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?… அவருக்கு இப்படி ஒரு நிலைமையா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

நடிகர் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘பிரண்ட்ஸ்’. இத்திரைப்படத்தில் குட்டி விஜயாக நடித்து பிரபலமானவர் நடிகர் பரத் ஜெயந்த். இதைத் தொடர்ந்து இவர் வானத்தைப்போல, பிரியமான தோழி போன்ற பல திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார்.

   

இவர் வெள்ளித் திரையில் மட்டுமின்றி, தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் வெளியான ‘சக லக்க பூம் பூம்’ என்ற தொலைக்காட்சி சீரியல் மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நடிப்புக்கு விட்டுவிட்டு அவர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார். லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தார்.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் ‘இளமை நாட்கள்’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இதை தொடர்ந்து படங்களுக்கு முயற்சி செய்யாமல் தற்பொழுது இவர் ஐஸ் விற்று வருகிறார். சென்னையில் பிரபல சேனல் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ‘சிறிய வயதிலிருந்து நிறைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

கல்லூரி வந்த பின்னர் எனக்கும் சினிமாவுக்கும் ஒரு சின்ன கேப் விழுந்து விட்டது’. மேலும் அவர் ‘உண்மையில் சினிமாவில் ஜெயிப்பதற்கு பின்னால் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் அவர்கள் வழியாகத்தான் நாம் வெளியே தெரிவோம். இதன் மூலம் தான் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் அந்த மாதிரி சப்போர்ட் செய்ய எனக்கு யாரும் இல்லை’ என்று குறிப்பிட்ட அவர், தற்பொழுது ஐஷ் விற்று வருவதாகவும், தனக்கு இந்த ஐடியா சிறுவயது முதலே இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பலசுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த அவரின் வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….