ரசிகர்களால் பிரம்மாண்ட முறையில்… மேள தாளத்துடன் வரவேற்கப்பட்ட பிக் பாஸ் ஷிவின்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ…

பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் இடத்தை பெற்று வெளியேறிய திருநங்கை போட்டியாளர் ஷிவின் தற்போது ரசிகர்களால் வரவேற்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் அக்டோபர் 9ம் தேதி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது  தொடங்கப்பட்டது.. இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களில் இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், சிவின் மற்றும் அசிம் இடம் பெற்று இருந்தனர் .

   

இவர்களில் வெற்றியாளராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு, விலையுயர்ந்த கார் மற்றும் பரிசுக்கோப்பை போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் பலரும் விக்ரமன் தான் வெற்றி பெறுவார் அல்லது ஷிவின் வெற்றி பெறலாம் என்று கணித்து வைத்திருந்தனர். ஆனால் விஜய் டிவியின் இந்த எதிர்பாராத முடிவால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றே கூறலாம்.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துள்ள விக்ரமன் தனது முதல் வீடியோவை இணையத்தில் பதிவு செய்திருந்தார். அதில் ரசிகர்களின் அன்பு குறித்து அவர் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். தற்பொழுது இந்நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பெற்ற திருநங்கை ஷிவினுக்கும் ரசிகர்களின் பாராட்டு குவிந்து வருகிறது. தற்பொழுது ஷிவினை ரசிகர்கள் பிரம்மாண்ட முறையில் வரவேற்ற வீடியோக்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

வைரல் வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Shivin (@shivinganesan)