‘புரட்சித்தலைவர்’ எம்ஜிஆரின் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திய பிரபல நடிகர்… அட இவரா?… வைரலாகும் புகைப்படம் இதோ…

நடிகர் விஷால் தனது நெஞ்சில் எம்ஜிஆரின் முகத்தை பச்சைகுத்திய புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிகர் சங்கத்தின் செயலாளர் என்பதும் நாம் அறிந்ததே. பிரபல தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகனான விஷால் இயக்குனராகும் கனவோடு திரை உலகில் நுழைந்தவர். ‘வேதம்’ படத்தில் நடிகரும்  இயக்குனருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2004 இல் வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

   

இதைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி’ திரைப்படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது. இவர் நடிப்பில் வெளியான திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற ஆக்சன் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் விஷால் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் காதலிக்கும் பிளேபாயாக கலக்கியிருந்தார். இவர் நடிப்பையும் தாண்டி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் ‘லத்தி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது .இந்நிலையில் நடிகர் விஷாலின் நடிப்பில் அடுத்ததாக ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் புதிய தோற்றத்தில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .இதில் அவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் முகத்தை தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

வைரலாகும் அவரின் புகைப்படம் இதோ….