அடடே இவர்தான் நடிகர் பார்த்திபனின் அம்மாவா?… முதன்முறையாக அவரே வெளியிட்ட பதிவு…. வைரலாகும் வீடியோ இதோ…

நடிகர் பார்த்திபன் தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு வரும் இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் ‘புதிய பாதை’ படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். திரையரங்குகளை மையப்படுத்தி எடுத்த ‘ஹவுஸ் ஃபுல்’ திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. இதன் தொடர்ச்சியாக ஒரே ஒருவர் நடித்த பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது.

   

சமீபத்தில் வெளியான இவரின் ‘இரவின் நிழல்’ திரைப்படம் உலகின் முதலில் வெளியான சிங்கிள் ஷார்ட் நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் நடிகர், இயக்குனர் என சினிமாவில் இரட்டை வேடங்களில் கலக்கி கொண்டு வருகிறார்.

புத்தாண்டு முன்னிட்டு அனைத்து பிரபலங்களும் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வாழ்த்துக்களையும் இணையத்தில் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் ஒரு சூப்பர் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்தார்.

அதாவது அவரது தாயாரின் பிறந்த நாளும், புத்தாண்டும் ஒன்றாக வந்துள்ளது. எனவே அவர் அந்நாளில் கேக் வெட்டி தனது தாயாருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இந்த வீடியோவை அவரே தனது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ….