நேருக்கு நேர் மோதும் போட்டியாளர்கள்… அசீமின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் ரக்ஷிதா… பரபரப்பான ப்ரோமோ இதோ…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது 85 நாட்களைக் கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் இறுதியாக மணிகண்டன் பிக் பாஸ் விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

   

மீதமுள்ள எட்டு போட்டியாளர்களில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் நேருக்கு நேர் விவாதம் மேற்கொள்கின்றனர்.

அதில் டிக்கெட்டு பினாலே டாஸ்க்கில் ஒன்றான விவாதம் இடம்பெறுகின்றது. அதாவது நேருக்கு நேராக 2பேருக்கு இடையில் அந்த டாஸ்க் இடம்பெறுகின்றது. அந்தவகையில் இந்த ப்ரோமோவில் அசீமிற்கும், ரச்சிதாவிற்கும் இடையில் பயங்கரமான விவாதம் இடம்பெறுகின்றது. அதில் அசீம் “நீங்க வந்து இந்த 86 நாளும் என்ன பண்ணி இருக்கீங்க” எனக் கேட்கின்றார்.

அதற்கு ரச்சிதா எந்த டாஸ்க்கிலும் நீங்க அதிகமாக பங்கு பற்றியதாகத் தெரியவில்லை. நீங்க நிறைவாகத் தெரியிற அளவிற்கு என்ன பண்ணி இருக்கீங்க” எனக் கேட்கின்றார். அதற்கு ரச்சிதா “ரீல் முகம், ரியல் முகம் எல்லாமே நான் வெளிய நடிச்சாச்சு அசீம், இங்க வந்து நான் நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை” எனக் கூறுகின்றார். இவ்வாறு இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….