சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளுடன் ஒர்கவுட் செய்யும் இவர் யார் தெரியுமா?… அட இவரா?… வைரல் வீடியோ இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

   

இவர்களுக்கு யாத்ரா. லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். தங்களது மகன்களின் பள்ளி விழாக்களில் மட்டும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர். தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல இவர் தற்பொழுது ‘லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது. தனது இணையதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அவ்வப்பொழுது தனது உடற்பயிற்சி வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது நடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவா உடன் வொர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….