நேரலையில் ரசிகர் கிட்ட கிளாமர் புகைப்படம்… அப்படியொரு புகைப்படத்தை பதிவு செய்து ரசிகரை ஷாக்காகிய நடிகை நந்திதா… வைரல் புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு தனது முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

   

மிகவும் எதார்த்தமான கதைக்களத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அட்டகத்தி திரைப்படம் கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தை தொடர்ந்து பிரபலமானார் நந்திதா ஸ்வேதா. இவர் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தற்பொழுது நடித்து வருகிறார் நடிகை நந்திதா.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை நந்திதா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து கொள்கிறார். இவர் சமீபத்தில் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் பீச் புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் பீச்சில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை அப்படியே பதிவு செய்து ரசிகரை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்….