புது ஹேர் ஸ்டைல்…. ஆள் அடையாளமே தெரியாம மாறிப்போன ஜெய் பீம் பட நடிகை…. வைரல் புகைப்படங்கள்…!!!

ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை புது ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள வைரல் புகைப்படங்கள்.

   

மலையாளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் மகேஷின்டே பிரதிகாரம். இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோ மோல் ஜோஸ்.

இப்படத்தை தொடர்ந்து ஹனி பி என்ற படத்தில் நடித்திருந்தார், தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வரும் இவர் தமிழில் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நடிகர் சூர்யா தயாரித்த ஜெய் பீம் படத்தில் ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அந்த திரைப்படத்தில் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார்.

இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அப்படத்தில் நடித்திருந்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக நடிகை லிஜோ மோலுக்கு ஐந்து விருதுகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து தற்போது தமிழில் அன்னபூரணி, காதல் என்பது பொதுவுடமை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வரும் லிஜோ மோல் தற்போது விசு பண்டிகையை முன்னிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆண்களைப் போல் ஹேர் கட்டிங் செய்து புதிய லுக்கில் அவர் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சிரியமாகியுள்ளனர்.

ஒரு வேலை புது படத்திற்காக அவர் வைத்திருக்கும் கெட்டப் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..