அடுத்தடுத்து தொடரும் மரணங்கள்… திடீரென மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்… இது தான் காரணமா?… அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்…

பிரபல தயாரிப்பாளரான பட்டியல் சேகர் அவர்களின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2006 ல் வெளியான ‘பட்டியல்’ திரைப்படத்தை தயாரித்தவர் சேகர். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் ‘பட்டியல் சேகர்’ என்று அழைக்கப்பட்டார்.

   

மேலும் இத்திரைப்படத்தில் பரத், ஆர்யா, பூஜா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை தொடர்ந்து கழுகு மற்றும் அலிபாபா போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் பட்டியல் சேகர். இதைத்தொடர்ந்து ‘ராஜதந்திரம்’ படத்தில் வில்லனாகவும் நடித்து  அசத்தினார். இவர் நடிகர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தை ஆவார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் பட்டியல் சேகர் கடந்த ஒரு காலமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார் பட்டியல் சேகர். இவர் தற்பொழுது தனது 63 வயதில் மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் பட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவிற்கு திரையுலகினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதை கேள்விப்பட்ட ரசிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து நிகழும் மரணங்களால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.