‘நான் வாங்கிய முதல் பொருள்’… எமோஷனலாக பதிவு வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரபலம்… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளடைவில் மிகப் பிரபலமாகி விடுகின்றனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிக வேகமாக காலடி எடுத்து வைத்து விடுகின்றனர்.

   

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரகதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல படங்களில் தற்போது பிஸியாக பாடிக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிரகதி. இவர் தற்போது ஒரு புதிய காரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தான் வாங்கிய புதிய காரின் முன் நின்று பிரகதி புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை பதிவு செய்து ‘நான் வாங்கிய பெரிய முதல் பொருள், நிறைய கூற வேண்டும் ஆனால் தற்போது எமோஷ்னலாக உள்ளது ‘ என பதிவு ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வைரல் பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)