கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன சூப்பர் ஸ்டாரின் ‘புதுக்கவிதை’ பட நடிகை… பலரும் அறிந்திடாத தகவல்கள் உள்ளே…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து அசத்தியவர் நடிகை ஜோதி. இயக்குனர் டி ராஜேந்திரன் அவர்களால் திரை உலகில் அறிமுகம் செய்யப்பட்ட பெருமைக்குரியவர். ‘ரயில் பயணங்களில்’ என்ற திரைப்படத்தில் இவர் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார். இதைத்தொடர்ந்து ‘புதுக்கவிதை’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார்.

   

இப்படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளை புறா ஒன்று’ என்ற பாடல் பட்டித்தொட்டி இயங்கும் ஹிட்டடித்தது. தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பை தந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை ஜோதி. இவர் 1960 இல் ஆந்திர மாநிலம் தெலுங்கு தாய் மொழியாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.

1981ல் ‘ரயில் பயணங்களில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் விஜயகாந்த் உடன் சட்டம் சிரிக்கிறது, சிவாஜி நடிப்பில் நெஞ்சங்கள், ராஜேஷ் உடன் முடிவல்ல ஆரம்பம், விஜயகாந்த் உடன் ராமன் ஸ்ரீதரன் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

பின்னர் தெலுங்கு சென்றுவிட்ட நடிகை ஜோதி 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரை உலகில் நடிக்க தொடங்கினார். அப்பொழுது அவர் பிரசாந்த், சிம்ரன், லைலா போன்றோருக்கு தாயாராக நடித்து அசத்தினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘அன்பு’. நடிகை ஜோதியின் திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். இவருக்கு அசீரா என்ற மகள் உள்ளார்.

இவருக்கு யாருமே எதிர்பாராத வகையில் திடீரென மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. இதனை மிகவும் தாமதமாக கண்டுபிடித்த காரணத்தினால் சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை. தனது கடைசி நாட்களில் இவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை ஜோதி 2007 ல் தனது 44 வயதில் மரணம் அடைந்தார்.