பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த விக்ரமன் வெளியிட்ட முதல் வீடியோ…  என்ன சொன்னாருன்னு தெரியுமா?… வைரலாகும் வீடியோ இதோ…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முடிவைத்தொடர்ந்து விக்ரமன் வெளியிட்ட முதல் வீடியோ தற்போதைய இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது.  இந்நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் விக்ரமன், அசீம்  மற்றும் சிவின் மூன்று பேரும் இறுதி போட்டிக்கு முன்னேறினார்கள்.

   

இவர்களில் ஷிவின் மூன்றாவது இடத்தை பிடித்து முதலில் வெளியேறினார். இதை தொடர்ந்து விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் வெற்றியாளர் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருந்த வேளையில், கமல்ஹாசன் அசிமின் கைகளை உயர்த்தி அசிமை வெற்றியாளராக அறிவித்தார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக  அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமன் பிடித்தார். இவர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மனதிலும்  முதல் இடத்தை பிடித்துள்ளார் என்று கூறலாம். தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள விக்ரமன் தனது இணையதள பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் விக்ரமன் கூறியுள்ளதாவது,

“வணக்கம். உங்க எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கணும். நீங்க எவ்வளவு சப்போர்ட் என் மேல காமிச்சீங்க அப்படின்னு வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்ததுக்கு அப்புறம் தான் என்னால உணர முடிஞ்சது. என் மேல் அவ்ளோ அன்பும், ஆதரவும் ரொம்ப ஆர்கானிக்கா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் காமிச்சு இருக்கீங்க. அதற்கு ஒரு மிகப்பெரிய நன்றி.

உங்களோட மனநிலை என்ன என்பதை நான் உணர்றேன். இது வந்து வெறும் நன்றி சொல்றதுக்காக மட்டும் போடப்பட்ட வீடியோ இல்ல. உங்களை எல்லாரையும் சந்திக்கலாம்ன்னு ஆசைப்படுறேன். அந்த மீட்டிங் நடக்கப் போகுது. அது எப்போன்னு நான் Official-ஆ அறிவிக்கிறேன். மறுபடியும் சொல்றேன் அன்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அறம் வெல்லும்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Vikraman R (@vikraman_r_official)