தயாரிப்பாளர் ரவீந்தரின் முதல் மனைவியை பாத்திருக்கீங்களா?… என்ன ஒரு ஜோடி பொருத்தம்…  நீங்களே பாருங்க…

தயாரிப்பாளர் ரவீந்தர் தனது முதல் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை சீரியலில் நடித்து தனக்கென மக்கள் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர் தனது திரைப்பயணத்தை சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கினார். இதை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் சீரியல் நடிகை மகாலட்சுமி.

   

இவர் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தயாரிப்பாளர் ரவீந்தர் தனது திருமண புகைப்படத்துடன், தங்களது திருமண செய்தியை இணையத்தில் பதிவு செய்தார். மொத்த திரையுலகமும் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்பொழுது வரை இவர்களுக்கு திருமணம் பற்றிய பேச்சு இணையத்தில் உலா வந்து கொண்டு தான் உள்ளது.

தொடர்ந்து பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து வந்தாலும் இவர்கள் தங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக தற்போது வாழ்ந்து கொண்டுள்ளனர். சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு ரவீந்திரருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இதைத் தொடர்ந்து திருமணம் ஆனது நாள் முதல் இவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது குடும்ப நிகழ்வுகளை அவ்வப்பொழுது பகிர்ந்த வண்ணமே உள்ளனர்.

நெட்டிசன்களின் எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுள்ளனர். இதைத் தவிர அவர்கள் அடிக்கடி தங்களது புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பளார் ரவீந்தர் தனது முதல் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இவர்தான் தயாரிப்பாளர் ரவீந்தரின் முதல் மனைவியா? ஜோடி பொருத்தம் நல்லா தானே இருக்கு’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….