அந்த தியேட்டருக்கு.. உதயம் என்ற பெயர் உதயமானது இப்படித்தானா..? பலரும் அறியாத அரிய தகவலை பகிர்ந்த பிரபலம்..!

உதயம் தியேட்டர் எப்படி உருவானது? என்பது குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதியில் உதயத்தூரிலிருந்து கடந்த 1983 ஆம் வருடத்தில் சகோதரர்கள் ஆறு பேர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.

   

அவர்கள் கேகே நகரில் ஒரு இடம் வாங்குகிறார்கள். பலரும் ஜவுளி வியாபாரம் மற்றும் பாத்திர கடைகளை நடத்தும்போது நாம் எதற்காக தியேட்டர் ஒன்றை நடத்தக் கூடாது? என்று முடிவெடுக்கிறார்கள். அதன்படி சிறிய தியேட்டர் ஒன்றை தொடங்குகிறார்கள். ஒரு திரை வைத்து அந்த தியேட்டர் ஆரம்பாகிறது.

நம் ஊரின் பெயரையே அந்த தியேட்டருக்கு வைத்து விடலாம் என்று யோசித்து உதயம் தியேட்டர் என்று வைத்திருக்கிறார்கள். அதுவே படிப்படியாக வளர்ந்து காம்ப்ளக்ஸாக மாறியது. அதன் பிறகு, அதற்கான பங்குகள் அதிகமானது. அதுவே தற்போதைய இந்த நிலைக்கு காரணம் என்று செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.