நடிகை நக்மா மேல் காதல் வயப்பட்ட இளம் நடிகர்.. கட்டுனா அவரை தான் கட்டுவேன்.. வெளியான வைரல் வீடியோ..!!

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி புயலாக 90களில் ஒரு காட்டு காட்டியவர் தான் நக்மா. வடக்கிலிருந்து தமிழ் சினிமாவில் தஞ்சமடைந்த நடிகைகளில் இவரும் ஒருவர். அன்றைய காலத்தில் நக்மாவை பார்த்து ஏங்காத ரசிகர்களே கிடையாது. இவர் ரஜினி, கமல், கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர் திரையுலகை விட்டு விலகினார்.

   

இவர் தற்பொழுது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் 45 வயதை தாண்டியும் நடிகை நக்மா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிப்பின் திறமை மூலம் அனைவரையும் குட்நைட் படத்தின் மூலம் கவர்ந்து இழுத்தார் நடிகர் மணிகண்டன். இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்திலும் நடித்திருப்பார். மேலும் மணிகண்டன் தற்போது காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லவ்வர்ஸ் படத்திலும் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் பிப். 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், விஜே சித்து, நடிகர் மணிகண்டன் மூவரும் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நடிகர் மணிகண்டனின் கிரெஷ் யாருன்னு கேட்டா, பிரபல நடிகை நக்மா தான் என கூறியுள்ளார். மேலும் நான் சின்ன வயதில் இருந்தே, நக்மாவை தான் காதலிக்கிறேன் என்றார். மேலும் கல்யாணம் பண்ணா அவரை தான் பண்ணுவேன் என்று சிறு வயதிலேயே சொன்னதை பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோ இதோ,