கமல் முதல் ரஜினி வரை… “வாக்கு செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றிய பிரபலங்கள்”… வைரல் புகைப்படங்கள்..!!!

இன்று காலை முதல் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தொடர்ந்து வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

   

ரஜினி, சிவகார்த்திகேயன், ராதிகா, தனுஷ், திரிஷா, குஷ்பூ, சுந்தர் சி, கமல்ஹாசன் பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் இன்று தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நடிகர், நடிகைகள் என பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

இன்று காலை 7:00 மணிக்கு நடிகர் அஜித்குமார் திருவான்மையூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார். அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் தனது வாக்கிய செலுத்தினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்கினை செலுத்தி சென்றார்.

இதைத்தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமார் தனது மகளான வரலட்சுமி உடன் வாக்கு செலுத்தி சென்றார். நடிகர் தனுஷ் சென்னை டி டி கே சாலையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

நடிகை குஷ்பு தனது மகள்கள் மற்றும் கணவருடன் வந்து வாக்கு பதிவு செலுத்தி சென்றார். நடிகர் கமலஹாசன் மற்றும் நடிகர் கருணாகரன், நடிகை திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தி சென்ற புகைப்படங்கள் இணையதள வெளியாகி வைரலாகி வருகின்றது.