
தமிழ் சினிமாவில் வில்லனாகவும் , குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர்1986 இல் கன்னடத்தில் வெளியான ‘ஆனந்த்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஒடியா, ஆங்கிலம் என 11 மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார்.
பகவதி, தமிழன் படத்தில் விஜய்க்கு எதிராக வில்லன் வேடத்தில் நடித்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி 2004ல் கில்லி திரைப்படத்தில் அப்பா ரோலில் நடித்து பட்டையை கிளப்பினர். தனுஷின் உத்தமபுத்திரன் படத்திலும் கலக்கலாக நடித்திருப்பார்.
இவர் தற்பொழுது பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவர் உண்மையில் குழந்தை மனம் கொண்டவராம்.
தற்பொழுது இவர் வெப் சீரிஸ்களிலும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி பிஸியான பான் இந்தியா நடிகராக வலம் வந்துகொண்டிருந்த ஆஷிஷ் வித்யார்த்தி, தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம பாப்புலராக இயங்கி வருகிறார்.
அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளி வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிக இடங்களுக்கு பயணிக்கும் அவர், ஆங்காங்கே உள்ள சிறு சிறு உணவகங்களில் சுவைத்து அதை வீடியோவாக வெளியிடுவார்.
அப்படி சமீபத்தில் ஆந்திராவில் உள்ள குக் கிராமம் ஒன்றில் அமைந்துள்ள சின்ன ஓட்டல் ஒன்றிற்கு சென்றிருந்த ஆஷிஷ் வித்யார்த்தி, அங்கு சுட சுட தோசை வாங்கி சுவைத்து, அங்குள்ள வடையும் அருமையாக இருந்ததாக குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். தற்பொழுது அவரின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ…
View this post on Instagram